இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; “தகவல் பரிமாற்றம், அரசாங்கத்தின் திட்டங்கள் பற்றி மக்களிடம் திறம்பட எடுத்து சொல்வது ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணியின் மிகப்பெரிய பலமாக விளங்குகிறது”.
“குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சாற்றலை சொல்லலாம். மக்களை கவரும் வகையில் ஏற்ற, இறக்கங்களுடன் அவர் மிகவும் சிறப்பாக பேசுகிறார். அவர் சிறந்த பேச்சாளர் என்பதில் சந்தேகம் இல்லை. இது அரசுக்கு சாதகமான அம்சம்”.
“ஆனால் இது மட்டுமே போதாது. மோடி சிறப்பாக செயல்பட்டு நன்மைகள் செய்வார் என்று நம்பித்தான் மக்கள் அவருக்கு வாக்கு அளித்தார்கள்”.
“ஆனால் அவர் சிறப்பாக பேசுகிறாரே தவிர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக செயல்படவில்லை. சொல்வதை அவர் செயலில் காட்டவேண்டும் என்றார் சசிதரூர்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது தூய்மை இந்தியா திட்டத்தையும் பாராட்டி பேசினார். இதனால் அவர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.