Home வணிகம்/தொழில் நுட்பம் இங்கிலாந்தின் தேசிய விமான சேவையில் கத்தார் ஏர்வேஸ் முதலீடு!

இங்கிலாந்தின் தேசிய விமான சேவையில் கத்தார் ஏர்வேஸ் முதலீடு!

881
0
SHARE
Ad

qatarபாரிஸ், பிப்ரவரி 2 – கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், உலகின் முன்னணி விமான அமைப்பான ஐஏஜி-ல் 10 சதவீத பங்குகளை 1.15 பில்லியன் பவுண்ட் கொடுத்து வாங்கியுள்ளது.

இங்கிலாந்தின் தலைநகரான லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் குரூப்’ (International Airlines Group) என்பது, புகழ்பெற்ற பிரிட்டிஷ் ஏர்வேஸ் மற்றும் ஐபிரியா நிறுவனங்களின் இணைப்பாகும்.

இந்த ஐஏஜி நிறுவனம், வர்த்தக வருவாயில் உலக அளவில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கிலாந்தின் தேசிய விமான நிறுவனத்தில், வளைகுடா நாடுகளை சேர்ந்த ஒரு நிறுவனம் முதலீடு செய்வது இங்கிலாந்தின் வர்த்தக வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

#TamilSchoolmychoice

இது குறித்து ஐஏஜி-யின் தலைமை நிர்வாக அதிகாரி வில்லி வால்ஷ் கூறுகையில், “கத்தார் ஏர்வேஸ் உடன் எங்கள் நிறுவனம் இணைந்து பணியாற்ற இருப்பது பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது”.

“அவர்கள் பிரிட்டிஷ் ஏர்லைன்சிற்கு நீண்ட கால ஆதரவு தரும் பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ஐஏஜி-ன் பெரும் பங்குதாரராகியுள்ள கத்தாரால் இங்கிலாந்தின் தேச பாதுகாப்பிற்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடான கத்தாருக்கு ஹமாஸ், ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அந்த அமைப்புகளுக்கு கத்தார் நிதி உதவி அளித்து வருவதாகவும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக இங்கிலாந்தின் முக்கிய அரசியல் விமர்சகர் ஒருவர் கூறுகையில், “நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனத்தை தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கும் ஒரு நாட்டிற்கு விற்பனை செய்வதன் மூலம் நாம் பகிர்ந்து கொள்வது முதலீடுகளையா அல்லது நம் மதிப்பீடுகளையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். எனினும், கத்தார் அரசு இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.