Home வணிகம்/தொழில் நுட்பம் சஹாரா நிறுவனத்தின் கிராஸ்வெனர் ஹவுஸ் விற்பனைக்கு வந்தது!

சஹாரா நிறுவனத்தின் கிராஸ்வெனர் ஹவுஸ் விற்பனைக்கு வந்தது!

448
0
SHARE
Ad

grosvenor-house-exteriorலண்டன், மார்ச் 5 – கடன் பாக்கிகளை கட்டத் தவறியதால் ‘பேங்க் அப் சீனா’ (Bank of China), இந்திய நிதி நிறுவனமான சஹாரா குழுமத்தின் ‘கிராஸ்வெனர் ஹவுஸ்’ (Grosvenor House) விடுதியை கைப்பற்றியுள்ளது. மேலும், லண்டனில் இருக்கும் இந்த நட்சத்திர விடுதியை விற்பனை செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

இந்தியாவில் 1978-ம் ஆண்டு சுப்ரதா ராய் என்பவரால் தொடங்கப்பட்ட சஹாரா நிறுவனம், தனது நிதிக் கொள்கைகளால் இந்தியாவைத் தாண்டி பல வெளிநாடுகளிலும் பெரும் புகழ்பெற்றது. அதன் காரணமாக சுப்ரதா ராய், இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துகளை வாங்கினார்.

Subrata_Royஇந்நிலையில் தனது நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்களுக்கு சுமார் 20 ஆயிரம் கோடி திருப்பி தரவில்லை என அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக கைது செய்யப்பட்ட அவர் கடந்த ஓராண்டு காலமாக திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அவரை ஜாமினில் விடுவிக்க வேண்டுமானால் குறிப்பிட்ட தொகையை பிணைத்தொகையாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், லண்டன் நகரின் மையப்பகுதியான பார்க் லேன் என்ற இடத்தில் அமைந்துள்ள கிராஸ்வெனர் ஹவுஸ் விடுதியை சீன வங்கி கைப்பற்றவே, அந்த விடுதியை விற்று கடனை அடைக்க சஹாரா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு சஹாராவால், 470 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கப்பட்ட இந்த விடுதியின், தற்போதய மதிப்பு 500 மில்லியன் பவுண்டுகளைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.