Home உலகம் கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!

கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை 275 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!

536
0
SHARE
Ad

afg-aus-cricket-afp-670பெர்த், மார்ச் 5 – ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பெர்த்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, 6 விக்கெட் இழப்புக்கு 417 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 418 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 38-வது ஓவரில் 142 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் பெர்மூடா அணிக்கு எதிராக இந்திய அணி குவித்திருந்த 413 ரன்கள் என்ற முந்தைய சாதனையை ஆஸ்திரேலிய அணி முறியடித்தது.