Home இந்தியா கிரிக்கெட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜம் – ரசிகர்களுக்கு மோடி ஆறுதல்!

கிரிக்கெட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜம் – ரசிகர்களுக்கு மோடி ஆறுதல்!

890
0
SHARE
Ad

Tamil-Daily-News_43584406376புதுடெல்லி, மார்ச் 27 – உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றியும், தோல்வியும் சகஜமானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். உலககோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், சோகத்தில் உள்ள இந்திய ரசிகர்களை உற்சாகமூட்டும் வகையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். மோடி டுவிட்டரில் கூறியுள்ளதாவது:

“வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு அங்கம்தான். இத்தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அவர்களால் நாம் பெருமை அடைந்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.