Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது!

மலேசியாவைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜிஎஸ்டி நடைமுறைக்கு வருகிறது!

675
0
SHARE
Ad

GSTகோலாலம்பூர், மார்ச் 27 – மலேசியாவும், இந்தியாவும் பல வருட தாமதத்திற்குப் பிறகு தங்கள் வரி அமைப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வர உள்ளன. இரு நாடுகளும் பொருட்கள் மற்றும் சேவை வரி (GST)-ஐ அமல்படுத்த இருப்பதால், வரி விதிப்பு நடைமுறைகள் எளிமையாகி பணச் சுமை குறைய வாய்ப்புள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுப்பெறும் நிபுணர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். மலேசியாவைப் பொருத்தவரை நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு 5 வருடங்களுக்கும் மேலாகி உள்ளது.

எனினும், ஏப்ரல் 1-aaம் தேதி முதல் தான் நடைமுறைக்கு வர உள்ளது. இந்தியாவை பொருத்தவரை, இந்த வரி விதிப்பு முறை 15 வருடங்களுக்கான போராட்டமாகும். சட்டம் இயற்றுபவர்கள் இதன் நன்மைகளை எடுத்துரைத்தாலும், மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் ஜிஎஸ்டி-க்கு ஆதரவாக கருத்தொற்றுமை ஏற்படவில்லை.

#TamilSchoolmychoice

எனினும், பல்வேறு தீவிர முயற்சிகளுக்குப் பிறகு, அடுத்த வருடம் முதல் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. சுமார் 160 நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த வரி விதிப்பு முறையை, ஏற்றுக் கொள்ள மலேசியா, இந்தியா தயாராகி உள்ள நிலையில், இது தொடர்பாக மலேசிய சுங்கத் துறையின் உள் வரிவிதிப்பு பிரிவின் இயக்குனர் சுப்பிரமணியம் துளசி கூறுகையில்,

“ஜிஎஸ்டி போன்று வெளிப்படையான வரி விதிப்பு முறை அவசியமானதாகும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் உந்துதல் பெறும்” என்று கூறியுள்ளார்.

பெரும்பான்மையான பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிப்பதால், அரசு தனது வருவாயை பன்முகப்படுத்த முடியும். இதனை இரு நாடுகளும் செய்ய இருப்பதால், மக்கள், நிறுவனங்கள் என அனைத்து தரப்பையும் நேரடியாக வரி செலுத்த வைக்க முடியும்.

மலேசியாவைப் பொருத்தவரை 10 சதவீதம் பேர் வருமான வரி செலுத்துகின்றனர். ஆனால், இந்தியாவில் 3 சதவீதத்திற்கும் குறைவானவர்களே சரியான முறையில் வரியை செலுத்துகின்றனர். எனவே இரு நாடுகளுக்கும் இந்த வரி விதிப்பு முறை அவசியமாகிறது.