Home One Line P1 ஜிஎஸ்டியை மீண்டும் செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை அரசு ஆராயும்

ஜிஎஸ்டியை மீண்டும் செயல்படுத்தும் சாத்தியக்கூறுகளை அரசு ஆராயும்

739
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருட்கள் மற்றும் சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட பல்வேறு வருவாய் அதிகரிக்கும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய நிதி அமைச்சகம் ஒரு குழுவை அமைத்துள்ளது.

இதனை மேபேங்க் முதலீட்டு வங்கி (மேபேங்க் ஐபி) ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்ட ஒரு குறிப்பில், வரி பலவீனங்களை பகுப்பாய்வு செய்தல், பொருளாதாரத்தில் புதிய வரிவிதிப்பின் தாக்கம், புதிய வரிக்கான விருப்பங்கள், வரி சலுகைகளை பகுப்பாய்வு செய்தல், வரி நிர்வாகத்தை மேம்படுத்துதல், வரி தணிக்கைகளை மேம்படுத்துதல் போன்ற விவகாரங்களை மதிப்பாய்வு செய்வதாக மேபேங்க் ஐபி ரிசர்ச் தெரிவித்யுள்ளது.

#TamilSchoolmychoice

“பொருளாதார மீட்பு செயல்முறைக்கு இடையூறு விளைவிக்காதபடி இது இருக்க வேண்டும். நேரமும் முக்கியமானது.

“2021 என்பது நெருக்கடியிலிருந்து மீட்கும் ஆண்டு,” என்று தெங்கு ஜாப்ருல் மேற்கோளிட்டு அது கூறியுள்ளது.

நடுத்தர காலப்பகுதியில், 2023-ஆம் ஆண்டளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 விழுக்காடாக வரவு செலவு பற்றாக்குறையை குறைக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று தெங்கு ஜாப்ருல் தெரிவித்துள்ளார்.