Home One Line P1 கொவிட்19: 28 டாப் கிளோவ் தொழிற்சாலைகள் மூடப்படும்!

கொவிட்19: 28 டாப் கிளோவ் தொழிற்சாலைகள் மூடப்படும்!

552
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிள்ளானில் உள்ள மொத்தம் 28 டாப் கிளோவ், கையுறை தொழிற்சாலைகள் செயல்பாட்டை நிறுத்திவிடும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இஸ்மாயில், டாப் க்ளோவ் ஊழியர்களிடையே தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, தொழிற்சாலை தொழிலாளர்கள் பரிசோதனை மற்றும் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுத்துவதற்கு இந்த மூடல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

“இன்று 1,067 தொற்று சம்பவங்கள் உள்ளன என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில், இன்றைய சந்திப்புக் கூட்டம் இந்த தொழிற்சாலைகளை கட்டங்களாக மூட ஒப்புக் கொண்டுள்ளது, ” என்று அவர் கூறினார்.