கோலாலம்பூர்: தேசிய முன்னணி துணைத் தலைவர் முகமட் ஹசான், இன்று தேசிய முன்னணி கூட்டம் நடைபெறுவதை உறுதிப்படுத்தினார்.
ஆயினும், இந்த கூட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை அவர் வெளியிடவில்லை. இது எப்போதும் போல நடைபெறும் ஒரு சந்திப்புக் கூட்டம் என்று அவர் தெரிவித்தார்.
“இன்றைய தேசிய முன்னணி சந்திப்புக் கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் கூட்டம் போல, சாதாரணமான கூட்டம்தான்,” என்ரு அவர் கூறினார்.
சந்திப்புக் கூட்டம் இன்று இரவு 8 மணிக்கு, அம்னோ தலைமயகத்தில் நடைபெறும் என்று அவர் கூறினார். இதில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், மகளிர் பிரிவு, இளைஞர் பிரிவுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தேசிய முன்னணி உச்சமன்றக் குழுவும் இதில் கலந்து கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இன்றைய கூட்டம் வரவு செலவு திட்டம் தொடர்பானதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஹசான், அது குறித்து கூற இயலாது என்று தெரிவித்ததாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
சில அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரசு செலவு திட்டம் தொடர்பாக அதிருப்தி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.