Home One Line P1 நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டின் கீழ் வணிகங்கள் இனி நள்ளிரவு 12 வரை திறக்க அனுமதி

நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டின் கீழ் வணிகங்கள் இனி நள்ளிரவு 12 வரை திறக்க அனுமதி

802
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் மாநிலங்களில் உள்ள வணிகங்கள் நாளை முதல் நள்ளிரவு வரை செயல்பட அனுமதிக்கப்படும் என்று தேசிய பாதுகாப்பு மன்றம் இன்று தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய பாதுகாப்பு மன்றம், இன்று முகநூல் பதிவு வாயிலாகத் தெரிவித்தது. தற்போது இரவு 10 மணி வரை மட்டுமே வணிகங்கள் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், கிளந்தான், சபா மற்றும் லாபுவான் ஆகியவை தற்போது நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை கீழ் உள்ளன. அதே நேரத்தில், ஒரு சில மாவட்டங்களைத் தவிர கெடா, மலாக்கா, திரெங்கானு மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளின் கட்டுப்பாடுகள் சமீபத்தில் நீக்கப்பட்டது.