கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோய் மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவுகளின் காரணமாக மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் மொத்தம் 204 சுற்றுலா தொடர்பான நிறுவனங்கள் நாடு முழுவதும் மூடப்பட்டுள்ளன.
சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் நான்சி சுக்ரி கூறுகையில், அவற்றில் 109 தங்கும் விடுதிககள், ரிசார்ட்ஸ், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், மற்றும் அறைகள், 95 பயண நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை கையாளும் நிறுவனங்கள் என்று கூறினார்.
அதே காலகட்டத்தில் சுற்றுலா தொடர்பான வணிகங்களுக்கு 135 புதிய உரிமங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
பல்வேறு முயற்சிகள் மூலம் சுற்றுலாத்துறைக்கு அமைச்சகம் எப்போதும் உதவியது என்று நான்சி சுட்டிக்காட்டினார்.
“பேங்க் பெம்பாங்குனான் மலேசியா பெர்ஹாட் மூலம் சுற்றுலா கட்டமைப்பு நிதியை அரசு வழங்குகிறது. மேலும், சிறிய மற்றும் நடுத்தர வங்கியால் நிர்வகிக்கப்படும் சுற்றுலா சிறப்பு நிதி போன்ற நிதி வசதிகளையும் அமைச்சகம் வழங்குகிறது,” என்று அவர் மேற்கோளிட்டுள்ளார்.
தற்போது, 2021 வரவு செலவு திட்டத்தில் வழங்கப்பட்ட 30 மற்றும் 200 மில்லியனுக்கும் பயன்படுத்தப்படாத ஒதுக்கீடு அரசாங்கத்திடம் உள்ளது என்று அவர் கூறினார்.
“தேசிய பாதுகாப்பு மன்ரம் பச்சை மண்டல பகுதிகளுக்கான பயணத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சுற்றுலா பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.