Home நாடு சுற்றுலாத் துறை தலைமை இயக்குநராக மனோகரன் நியமனம்

சுற்றுலாத் துறை தலைமை இயக்குநராக மனோகரன் நியமனம்

312
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : சுற்றுலாத் துறையின் தலைமை இயக்குநராக இருந்த டத்தோ டாக்டர் அம்மார் அப்துல் கப்பார் பதவியிறக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பொறுப்புக்கு மனோகரன் பெரியசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத் துறையில் நீண்ட காலம் அனுபவம் வாய்ந்தவர் மனோகரன். மலேசியா சுற்றுலாத் துறையின் இந்தியாவுக்கான இயக்குநராக 3 தவணைகளுக்கு பணியாற்றியிருக்கிறார். ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கான அனைத்துலக விளம்பரத் துறைக்கான உயர்நிலை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

தன் கடந்த கால பதவிக் காலத்தில் சுற்றுலாத் துறைக்கான முதல் அலுவலகத்தை 2001-இல் மும்பையில் அமைத்தவர் மனோகரன்.

#TamilSchoolmychoice

நிறைவான முறையில் பணியாற்ற முடியவில்லை என்பதால் அம்மார் சுற்றுலாத் துறையின் தலைமை இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகி மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என சுற்றுலா, கலை, கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் அறிவித்திருந்தார்.