வத்திக்கான் : போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் சளிக்காய்ச்சலால் அவதிப்படுவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரோம் நகரிலுள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
87 வயதான போப்பாண்டவர், வாரந்தோறும் வழங்கும் உரையை இந்த முறை தவிர்த்து விட்டு தனது உதவியாளரிடம் அந்தப் பொறுப்பை வழங்கினார். தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும் தெரிவித்திருந்தார்.
பல்வேறு உடல்நலக் கோளாறுகளைக் கொண்டிருக்கும் போப்பாண்டவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் வழக்கமான உரையை செயிண்ட் பீட்டர் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்களிடையே வழங்கினார்.
கடந்த சில நாட்களாக அவர் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட பல சந்திப்புகளை உடல் நலத்தைக் காரணம் காட்டி தவிர்த்திருக்கிறார்.
அனைத்துலக அளவிலும் அவர் பல நிகழ்ச்சிகளை கடந்த சில மாதங்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார்.
அர்ஜெண்டினாவில் பிறந்து வளர்ந்த போப்பாண்டவரின் நுரையீரலின் ஒரு பகுதி அவர் இளம் வயதாக இருக்கும்போதே அகற்றப்பட்டது.
அண்மையக் காலமாக அவர் பெரும்பாலும் சக்கர நாற்காலியில்தான் வலம் வந்தார். சில சமயங்களில் கைத்தடியையும் பயன்படுத்தினார்.