Home One Line P1 ஜிஎஸ்டி வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம்

ஜிஎஸ்டி வரி மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம்

845
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசாங்கம் நாட்டின் வருவாய் தளத்தை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை கவனித்து வருகிறது. மேலும், இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீண்டும் கொண்டு வருவதை அரசு நிராகரிக்கவில்லை.

உலக வங்கி குழுமம் ஏற்பாடு செய்த குழு கலந்துரையாடலின் போது பேசிய, நிதி அமைச்சகத்தின் துணை பொதுச் செயலாளர் ஜக்கியா ஜாபர், கடந்தாண்டு மார்ச் மாதம் கொவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்டபோது அரசாங்கம் வரி சீர்திருத்தங்களை ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

“நாங்கள் ஜிஎஸ்டியை மீண்டும் நிலைநிறுத்தப் போகிறோமா என்று நீங்கள் கேட்கிறீர்கள் என்றால், அது நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒரு பகுதியாகும். நம் வருவாய் தளத்தை எவ்வாறு விரிவுபடுத்துவது என்பதை ஆராய வேண்டும், ” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“தற்போதுள்ள வரி கட்டமைப்புகள் மற்றும் வரி விதிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நாம் மதிப்பாய்வு செய்கிறோம். எந்தவொரு மாற்றத்தையும் செய்வதற்கு முன்னர் பொருளாதாரம் நிலையாகும் வரை காத்திருப்போம், ” என்று அவர் மேலும் கூறினார்.