Home நாடு அன்வார் இப்ராகிம் வரவு செலவுத் திட்டத்தின் போது மேற்கோள் காட்டிய குறள் எது தெரியுமா?

அன்வார் இப்ராகிம் வரவு செலவுத் திட்டத்தின் போது மேற்கோள் காட்டிய குறள் எது தெரியுமா?

447
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதியமைச்சராக சமர்ப்பிக்கும் முதல் வரவு செலவுத் திட்டமான 2024 ஆண்டுக்கான பட்ஜெட் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 13) பிற்பகல் 4.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அந்த வரவு செலவு திட்டத்தை அன்வார் இப்ராகிம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இன்று உரையாற்றியபோது தமிழிலேயே ஒரு திருக்குறளை மேற்கோள் காட்டினார்.

பின்னர் மலாய் மொழியிலேயே அந்த திருக்குறளுக்கான  விளக்கத்தையும் அளித்தார்.

#TamilSchoolmychoice

அன்வார் மேற்கோள் காட்டிய பொருத்தமான குறள் இதுதான்:

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

இந்தத் திருக்குறளுக்கான மு.வரதராசனார் உரை பின்வருமாறு:

பொருள் வரும் வழிகளை மேன்மேலும் இயற்றலும் வந்த பொருள்களைச் சேர்த்தலும், காத்தலும் காத்தவற்றை வகுத்துச் செலவு செய்தலும் வல்லவன் அரசன் (அல்லது அரசு).

இந்த விளக்கத்தையும் பொருத்தமாக சுட்டிக் காட்டிய அன்வார், அந்த அடிப்படையில்தான் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டமும் அமைந்திருப்பதாக கூறினார்.