Home நாடு மித்ரா : நஜிப் அன்று கொடுத்த 100 மில்லியன்தான் இன்றும் தொடர்கதையா?

மித்ரா : நஜிப் அன்று கொடுத்த 100 மில்லியன்தான் இன்றும் தொடர்கதையா?

626
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நிதியமைச்சராக சமர்ப்பித்த 2024 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மித்ரா என்னும் இந்தியர் மேம்பாட்டு உருமாற்றப் பிரிவுக்கு மீண்டும் அதே 100 மில்லியன் ரிங்கிட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நரேந்திர மோடி அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழ் நாட்டு மக்களை குளிர்விப்பதுபோல், இந்த முறை அன்வாரும் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி மலேசியத் தமிழர்களின் மனங்களை குளிர்வித்திருக்கிறார்.

ஆனால், இந்திய சமூகத்திற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் கிடைக்கப் போகும் பலன்கள் என்ன?

#TamilSchoolmychoice

அன்று செடிக் என அப்போதைய பிரதமர் நஜிப் துன் ரசாக் உருவாக்கிய இந்தியர் உருமாற்றப் பிரிவுதான் இன்று மித்ரா!

நஜிப்தான் முதன் முதலில் 100 மில்லியன் ரிங்கிட்டை பல ஆண்டுகளுக்கு முன்னர் செடிக்கிற்கு ஒதுக்கீடு செய்தார்.

ஆண்டுகள் பல கடந்துவிட்டன! விலைவாசிகளும் உயர்ந்து விட்டன. அடுத்தடுத்து அரசாங்கங்களும் பலமுறை மாறிவிட்டன.

ஆனால், இன்றும் அதே 100 மில்லியன் ரிங்கிட்தான் இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தேசிய முன்னணி சார்பாக நஜிப் வழங்கிய அதே 100 மில்லியன் ரிங்கிட்டை தொடர்ந்து ஆண்டுதோறும் வழங்கிக் கொண்டிருப்பதுதான் பக்காத்தான் அரசாங்கத்தின் கடப்பாடா?

அப்படியானால், நஜிப்பைத் தோற்கடித்து, பக்காத்தானை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதில் முக்கியப் பங்காற்றிய இந்திய வாக்காளர்களுக்கு என்னதான் கைமாறு? என்னதான் புதிய திட்டங்கள்?

ஒன்றுமில்லை!

நஜிப் அறிவித்த அதே திட்டத்தை மீண்டும் மீண்டும் ஆண்டுதோறும் அறிவிக்கும் அன்வாரின் பக்காத்தான் அரசாங்கம் – இப்போது ஒற்றுமை அரசாங்கம் – அப்படியானால் இந்தியர்களுக்கென புதிய திட்டங்கள் எதையும் உருவாக்கவில்லையா?

இந்த வகையில் நஜிப்பின் தூரநோக்கு சிந்தனையை இந்திய சமூகம் பாராட்டத்தான் வேண்டும்.

அவரால்தான் இன்றும் இந்திய சமூகத்திற்கு 100 மில்லியன் ரிங்கிட் கிடைத்துக் கொண்டிருக்கிறதே தவிர – பக்காத்தான் அரசாங்கத்தின் முயற்சிகளால் அல்ல!

அந்த 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை மித்ராவுக்கு நிறுத்தினால் அதனால் இந்திய சமூகம் கொதித்தெழும் என்பதால்தால் ஆண்டுதோறும் அந்தத் தொகை மித்ராவுக்கு ஒதுக்கப்படுவதுபோல் தெரிகிறது.