Home One Line P1 ‘இந்தியர்கள் நலனுக்காக பிரதமரை ஆதரிப்போம், ஆனால்…’- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

‘இந்தியர்கள் நலனுக்காக பிரதமரை ஆதரிப்போம், ஆனால்…’- எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

659
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை (மார்ச் 15) மஇகா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மஇகா தொடர்ந்து பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை ஆதரிப்பதாகக் கூறினார்.

தற்போது, அரசாங்கத்தில் மஇகாவிலிருந்து டத்தோஸ்ரீ எம்.சரவணன் மட்டுமே இருப்பதால், தாங்கள் பதவிக்காக அரசாங்கத்துடன் இல்லையென்றும், இந்தியர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இயங்குவதாகவும் கூறினார்.

இதனிடையே, கடந்த 60 ஆண்டுகாலமாக நட்பு கட்சியான அம்னோவை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.