இந்தியாவில் 1978-ம் ஆண்டு சுப்ரதா ராய் என்பவரால் தொடங்கப்பட்ட சஹாரா நிறுவனம், தனது நிதிக் கொள்கைகளால் இந்தியாவைத் தாண்டி பல வெளிநாடுகளிலும் பெரும் புகழ்பெற்றது. அதன் காரணமாக சுப்ரதா ராய், இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் ஏராளமான சொத்துகளை வாங்கினார்.
அவரை ஜாமினில் விடுவிக்க வேண்டுமானால் குறிப்பிட்ட தொகையை பிணைத்தொகையாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், லண்டன் நகரின் மையப்பகுதியான பார்க் லேன் என்ற இடத்தில் அமைந்துள்ள கிராஸ்வெனர் ஹவுஸ் விடுதியை சீன வங்கி கைப்பற்றவே, அந்த விடுதியை விற்று கடனை அடைக்க சஹாரா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு சஹாராவால், 470 மில்லியன் பவுண்டுகளுக்கு வாங்கப்பட்ட இந்த விடுதியின், தற்போதய மதிப்பு 500 மில்லியன் பவுண்டுகளைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.