Home உலகம் சியோலில் அமெரிக்க தூதர் மீது கடும் தாக்குதல்!

சியோலில் அமெரிக்க தூதர் மீது கடும் தாக்குதல்!

685
0
SHARE
Ad

lippert1சியோல், மார்ச் 5 – தென் கொரியாவிற்கான அமெரிக்க தூதர் மார்க் லிப்பெர்ட் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சியோல் நகரில் தென் கொரியாவிற்கான அமெரிக்க தூதர் மார்க் லிப்பெர்ட்(வயது 42) நேற்று காலை உணவின்போது, அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது கொரிய போராளி ஒருவர் அமெரிக்க தூதரை தான் வைத்திருந்த கத்தியை கொண்டு கடுமையாக தாக்கினார்.

லிப்பெர்ட் முகம் மற்றும் இடது கையில் அந்த நபர் கத்தியை கொண்டு வெட்டினார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் போராளியை மடக்கி, பிடித்து கைது செய்தனர்.

#TamilSchoolmychoice

அமெரிக்க தூதரை தாக்குவதற்கு முன்னதாக போராளி தென் கொரியா மற்றும் வடகொரியா மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்று கத்தியதாகவும் கூறப்படுகிறது.

காயம் அடைந்த அமெரிக்க தூதர் மார்க் லிப்பெர்ட் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உயிருக்கு எந்தஒரு ஆபத்தும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டுவதற்கும் போராளி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் போராளி வட கொரியாவின் முகவர் என்பதற்கு எந்த ஒரு தடையமும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

??????????????????????????????????
காயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மார்க் லிப்பெர்ட்டிடம், அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைபேசியில் பேசியுள்ளார். அவரது உடல் நிலையை கேட்டறிந்த அவர், உடனடியாக குணம் அடைய வாழ்த்து தெரிவித்தார். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க பாதுகாப்பு துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அண்டை நாடுகளான தென்கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் பல ஆண்டு காலமாக பகைமை இருந்து வருகிறது. அணு ஆயுத தயாரிப்பில் வடகொரியா ஈடுபட்டு வருவதாக கூறப்படுவதால் தென்கொரியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது.

இதனால் தென்கொரியாவுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்க அளித்து வருகிறது. மேலும் அமெரிக்காவும், தென்கொரியாவும் அவ்வப்போது இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டும் வருகின்றன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

சமீபத்தில் தென்கொரியாவின் கடல் பகுதியில் அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கின. இது தனது நாட்டின் மீது போர் தொடுப்பதற்கான நடவடிக்கை என்று கருதிய வடகொரியா இந்த போர் பயிற்சி தொடங்கும் முன்பாகவே தென்கொரியாவை நோக்கி ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை தென்கொரிய கடல் பகுதியை நோக்கி செலுத்தியது. இந்த 2 ஏவுகணைகளும் 490 கி.மீ. தூரம் சென்று நடுக்கடலில் விழுந்தன.  ஏவுகணைகளை எந்த பகுதியில் செலுத்தக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு இருக்கிறதோ, அந்த பகுதியை நோக்கி இந்த 2 ஏவுகணைகளும் செலுத்தப்பட்டன. இதற்கு தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. ஜப்பானும் கடும் கண்டனம் தெரிவித்தது.