Home தொழில் நுட்பம் திறன்பேசிகளை இனி வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யலாம்!

திறன்பேசிகளை இனி வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்யலாம்!

562
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 9 – திறன்பேசிகள், ஐபேட் உள்ளிட்ட கையடக்கக் கருவிகளை பயன்படுத்தும் பொழுது நமக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் விஷயம், அந்த கருவிகளின் மின் செறிவு (சார்ஜ்).

முக்கியமான தருணங்களில் மின் செறிவு தீர்ந்து விட்டால், அந்த நேரத்தில் மின் செறிவூட்டி (சார்ஜர்) மற்றும் மின்சார வசதியை தேடி அலைய வேண்டி இருக்கும். இந்த பிரச்னை இந்த வருடத்துடன் காணமல் போவதற்கான சாத்தியக் கூறுகளை தொழில்நுட்ப நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன.

சூரிய சக்தி மூலம் மின் செறிவு பெறும் திறன்பேசிகள் ஏதேனும் கண்டறியப்பட்டுள்ளன வா? போன்ற கேள்விகள் எண்ணத் தோன்றும். ஆனால் இது கம்பியில்லா இணைப்பு (வயர்லெஸ்) செய்யும் மாயம். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இருந்த இடத்தில் இருந்தே நமது கருவிகளுக்கு மின் செறிவூட்டலாம்.

#TamilSchoolmychoice

410uz34VTWL

சமீபத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற செல்பேசி முதலீட்டாளர்கள் மாநாட்டில், திறன்பேசி உள்ளிட்ட கருவிகளை வயர்லெஸ் முறையில் மின் செறிவூட்டும் மேஜை, நாற்காலி மற்றும் மின்விளக்கு ஆகியவற்றை பிரபல ஸ்வீடன் நிறுவனமான ஐகியா அறிமுகம் செய்துள்ளது.

இந்த நவீன வீட்டு உபயோகப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் ‘வயர்லெஸ் சார்ஜிங் பேட்’ (Wireless charging pad)  இணைக்கப்பட்டிருக்கும். அவற்றின் மீது நமது கருவிகளை வைத்தால், தானாகவே மின் செறிவு பெறும். இந்த மின் செறிவூட்டல் ‘மேக்னட்டிக் இண்டக்‌ஷன்’ (Magnetic Induction) எனும் முறையில் செயல்படுகிறது. இந்த வகை மின் செறிவூட்டும் கருவிகளில் கடத்தியில் (Transmitter) பாயும் மின்சாரம், காந்த மண்டலத்தை உருவாக்கும். இதன் மூலம் ‘ரிசிவரில்’ (Receiver) வோல்டேஜ் உண்டாகும்.

நவீன திறன்பேசிகள் இவ்வகை மின் செறிவூட்டலுக்கு ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன. பார்சிலோனா கண்காட்சியில் அறிமுகமான சாம்சங் திறன்பேசி இதற்கு உதாரணம். ஐகியா உள்ளிட்ட மூன்று நிறுவனங்கள் இந்த மின் செறிவூட்டல் கருவிகளை பிரபலபடுத்தி வருகின்றன.

இந்த மூன்று அமைப்புகளும் ஒரு பொது வரையறை இல்லாமல் இருப்பதே இந்த கம்பியில்லா மின் செறிவூட்டல் முறையின் மிகப் பெரும் குறைபாடாக இருக்கிறது. ஏனெனில், ஒரு நிறுவனத்தின் கருவியில் செயல்படும் மின் செறிவு மற்றொரு நிறுவனத்தின் கருவியில் செயல்படாது. எனினும், இவை விரைவில் சரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.