Home உலகம் இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை மலையேற்றம் போன்றது – சீனா!

இந்தியாவுடனான எல்லைப் பிரச்சனை மலையேற்றம் போன்றது – சீனா!

606
0
SHARE
Ad

india_flag_mapபெய்ஜிங், மார்ச் 9 – இந்தியா-சீனா இடையே இருக்கும் எல்லை பிரச்சனை மலையேற்றத்தைப் போன்று மிகக் கடுமையானது என்று சீன அரசு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ,

“நீண்ட வரலாறு கொண்ட இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சனைக்கு தீர்வுகான பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனினும், தற்போது எல்லைப் பிரச்சனை கட்டுக்குள் உள்ளது”.

ஆனால் அதற்கு தீர்வு காண்பது மலையேற்றத்தைப் போன்று கடுமையானது. தற்போதைய நிலையில், இரு நாடுகளுக்கு இடையே தீர்வு நோக்கி செல்வதை விட நட்புறவை மேம்படுத்துவது அவசியம்”.

#TamilSchoolmychoice

“இந்நிலையில், எதிர்வரும் மே மாதம் சீனாவிற்கு வருகை தர விருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க காத்திருக்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் ஒரு பகுதியான அருணாசலபிரதேசத்தை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, எல்லைப் பிரச்சனை குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.