Home உலகம் சீன உளவுக் கப்பல் இலங்கை துறைமுகம் வராது

சீன உளவுக் கப்பல் இலங்கை துறைமுகம் வராது

602
0
SHARE
Ad

கொழும்பு : அண்மைய சில வாரங்களாக சீனாவின் உளவுக் கப்பல் ஒன்று இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் வந்தடையும் என்ற பரபரப்பான செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.

ஆனால் ஆகக் கடைசியாக இலங்கை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி அந்தக் கப்பல் இலங்கை வராது எனத் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ‘யுவான் வாங் 5’ என்ற உளவு கப்பலை, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்க சீனா திட்டமிட்டது.விண்வெளி மற்றும் செயற்கைக்கோளை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலை இலங்கையில் நிறுத்துவது, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது.

#TamilSchoolmychoice

இதை ஏற்று, அந்த உளவுக் கப்பலை இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.