சீன எல்லையில் இந்தியாவுடன் அமெரிக்கா கூட்டு இராணுவப் பயிற்சி

    568
    0
    SHARE
    Ad

    புதுடில்லி : சீனாவுடனான சர்ச்சைக்குரிய எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் இந்தியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சியில் அமெரிக்கா பங்கேற்க உள்ளது.

    இந்திய மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அவுலியில் 10,000 அடி உயரத்தில் அக்டோபர் நடுப்பகுதியில் ராணுவப் பயிற்சிகள் நடைபெறும் என்றும், உயர்மட்ட போர் பயிற்சியில் கவனம் செலுத்தப்படும் என்றும் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய எல்லை வரையறுக்கப்பட்ட இடத்திலிருந்து – கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து (எல்ஏசி) சுமார் 95 கிலோமீட்டர் தொலைவில் ஆலி உள்ளது.

    #TamilSchoolmychoice

    ஜூன் 2020 இல் இமயமலையில் தங்கள் வீரர்களுக்கு இடையே நிகழ்ந்த இரத்தக்களரி மோதலில் குறைந்தது 20 இந்திய துருப்புக்கள் மற்றும் நான்கு சீன வீரர்கள் கொல்லப்பட்டதில் இருந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவுகள் சிதைந்துள்ளன.

    எல்லையில் அமர்ந்திருக்கும் பாங்காங் த்சோ ஏரியின் குறுக்கே சீனா பாலம் கட்டியதால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த நடவடிக்கையை இந்திய அரசாங்கம் “சட்டவிரோத ஆக்கிரமிப்பு” என்று கண்டித்துள்ளது.

    இந்த ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் வட்டாரத் தலைவர் ஜெனரல் சார்லஸ் ஃபிளின், சர்ச்சைக்குரிய எல்லைக்கு அருகே சீனாவின் இராணுவக் குவிப்பு “ஆபத்தானது” என்று விவரித்தார்.

    தைவான் பிரச்சனையில், சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அண்மையில் மோதல்கள் எழுந்தன. தைவானுக்கு எதிராக போர்ப் பயிற்சிகளை சீனா மிரட்டல் விடுக்கும் நடத்தியது.

    அதைத் தொடர்ந்து சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீன எல்லையில் இந்தியாவுடனான இராணுவக் கூட்டுப் பயிற்சிகளில் அமெரிக்கா ஈடுபடுவதாகக் கருதப்படுகிறது.