Home நாடு 15-வது பொதுத் தேர்தல் : மே 2023 வரை தள்ளிப் போகலாம்

15-வது பொதுத் தேர்தல் : மே 2023 வரை தள்ளிப் போகலாம்

728
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நடப்பு நாடாளுமன்றத்தின் தவணைக்காலம் முடிவடையும்வரை ஆளும் அரசாங்கத்திற்கான ஆதரவு தொடரும் என பெர்சாத்து கட்சி அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அடுத்த பொதுத் தேர்தல் மே 2023 வரை தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெர்சாத்து கட்சியின் உதவித் தலைவர் ரோனால்ட் கியாண்டி, நாடாளுமன்ற தவணைக் காலம் முடிவடையும்வரை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி பிரதமர் இஸ்மாயில் சாப்ரியையும், ஆளும் அரசாங்கத்தையும் ஆதரிக்கும் என அறிவித்தார்.

ஏற்கனவே, பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணியும் நாடாளுமன்றத் தவணை முடிவடையும்வரை எங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தம் நீடிக்கும் என அறிவித்திருக்கிறது.