Home நாடு அஸ்மின் அலி: பெர்சாத்து கட்சியின் ஒரே துணைப் பிரதமர் வேட்பாளர்

அஸ்மின் அலி: பெர்சாத்து கட்சியின் ஒரே துணைப் பிரதமர் வேட்பாளர்

547
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின்படி பெர்சாத்து கட்சியின் சார்பில் துணைப் பிரதமராக அஸ்மின் அலி நியமிக்கப்படப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

டான்ஸ்ரீ மொகிதின் யாசின் பரிந்துரைத்த ஒரே துணைப் பிரதமர் வேட்பாளர் அஸ்மின் அலி மட்டுமே எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அந்தப் பரிந்துரைக்கு அம்னோ கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதால் பிரதமர் தற்போதைக்கு யாரையும் துணைப் பிரதமராக நியமிக்க மாட்டார் எனக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

அவ்வாறு துணைப் பிரதமர் நியமனம் கிடைக்காவிட்டாலும் பெர்சாத்து தொடர்ந்து பிரதமரை ஆதரிக்கும் என பெர்சாத்து உதவித் தலைவர் ரோனால்ட் கியாண்டி அறிவித்திருக்கிறார்.