தைபே, மார்ச் 9 – அட்லாண்டிக் பெருங்கடலில் 49 சிப்பந்திகளுடன் பயணம் செய்து கொண்டிருந்த தைவானை சேர்ந்த மீன்பிடி கப்பலை, கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல் காணவில்லை என்று கூறப்படுகின்றது.
“கப்பலுக்குள் தண்ணீர் கசிவதாக” கடைசியாக அந்த கப்பல் கேப்டனிடமிருந்து தகவல் கிடைத்தது என்றும், அதன் பிறகு எந்த தகவலும் இல்லை என்றும் கூறப்படுகின்றது.
அந்த கப்பலில் சீனாவை சேர்ந்த 11 பேர், இந்தோனேஷியாவை சேர்ந்த 21 பேர், பிலிப்பைன்சை சேர்ந்த 13 பேர், 2 வியட்நாம் நாட்டவர்கள் மற்றும் கேப்டன் என மொத்தம் 49 பேர் பயணம் செய்துள்ளனர்.
ஒரு வேளை, கப்பல் தண்ணீரில் ழூழ்கியிருந்தாலும், அதில் இருந்து தானாகவே போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைக்கும்படியான தொழில்நுட்பம் இருந்தும் எந்த தகவலும் வரவில்லை என்பதால் கப்பல் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கப்பல் காணாமல் போன உடனே அத்தகவல் ஏன் வெளியே சொல்லப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் அர்ஜென்டினா அரசுகளிடம் கப்பலை கண்டுபிடிக்க உதவுமாறு தைவான் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.