Home கலை உலகம் டி.ஆர்.ராஜேந்தரை யாரும் அவமதிக்க வேண்டாம் – ஜெயம் ரவி

டி.ஆர்.ராஜேந்தரை யாரும் அவமதிக்க வேண்டாம் – ஜெயம் ரவி

889
0
SHARE
Ad

t-rajendarசென்னை, மார்ச் 17 – ஜெயம் ரவி , ஹன்சிகா நடிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இப்படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்பு படத்தின் ஒரு பாடலாக அனிருத் பாடிய ‘டண்டனக்கா’ பாடல் வெளியானது. அப்பாடலில் டி.ஆர்.ராஜேந்தரை அவமதித்ததாக கூறப்பட்டது.

இது பற்றி நடிகர் ஜெயம்ரவி கூறியிருப்பதாவது; “’ரோமியோ ஜூலியட்’ படத்தில் நான் விஜய டி.ராஜேந்தரின் ரசிகனாக நடித்திருக்கிறேன். அவரது தன்னபிக்கை ‘எதுவும் என்னால் முடியும்’ ‘முயற்சி செய்து பார்,’ ‘இதுவும் முடியும் இதுக்கு மேலும் முடியும்’ என்கிற அவரது தன்னம்பிக்கை தான் படத்தில் என் கதாப்பாத்திரம்”.

“அதனால் தான் அவரது வரிகளான “ டண்டணக்கா” என்கிற வரிகளையும், அவரையும் சேர்த்து இந்த பாடலில் பதிவு செய்து இருக்கிறோம். எந்த ஒரு வரிகளிலும், வார்த்தைகளிலுமே அவரை குறைவாக குறிப்பிடவில்லை. அவரை பெருமை படுத்தும் விதமாகவே பாடல் உருவாக்கப் பட்டுள்ளது”.

#TamilSchoolmychoice

“நான் எப்போதுமே எந்த விதமான கருத்து மோதல்களிலும் சிக்கியதில்லை. எங்க அப்பா, அம்மாவுக்கு எப்படி செல்லப் பிள்ளையாக இருக்கிறேனோ அதே போல் எல்லாருக்கும் செல்லப் பிள்ளையாக இருக்க ஆசைப்படுகிறேன்”.

“அதனால் தயவு செய்து இந்த பாடலை யாரும் விமர்சனம் செய்து தன்னம்பிக்கை தமிழனான டி.ஆரை புண்படுத்த வேண்டாம் என்று அன்புடன் கேடடுக்கொள்கிறேன் என ‘டண்டனக்கா’ பாடல் குறித்து ஜெயம் ரவி கருத்து தெரிவித்துள்ளார்.