Home One Line P2 கோமாளி: வெளியான 6 நாட்களில் 25 கோடி ரூபாய் வசூல்!

கோமாளி: வெளியான 6 நாட்களில் 25 கோடி ரூபாய் வசூல்!

1068
0
SHARE
Ad

சென்னை: கடந்த ஆகஸ்டு 15-ஆம் தேதி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படம், வெளியான ஆறு நாட்களில் 25 கோடி ரூபாய் வசூல் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜெயம் ரவி, காஜல் அகர்வால் முதல் முறையாக இணைந்து நடித்திருக்கும் படம்கோமாளி‘. இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ளார். 16 ஆண்டுகள் கோமாவில் இருந்த இளைஞன் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட நவீன மாற்றங்களை வியப்புடன் பார்ப்பதை வேடிக்கையாக சொல்லி இருக்கிறது இப்படம்.

ஆறு நாட்களில் தமிழக அளவில் 25 கோடி ரூபாய் வசூலை கோமாளி படம் ஈட்டியுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  இந்தப்படம் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படங்களிலேயே அதிக அளவில் வசூலை பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

தற்போது ஹிப் ஹாப் ஆதி இசையில் கோமாளி படத்தில் இடம்பெற்றபைசா நோட்டு; பாடலின் வீடியோவை இணையதளத்தில் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர் இந்த பாடலுக்கு இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்பாடலின் காணொளியைக் காணலாம்: