Home One Line P1 “நாட்டின் அமைதியைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்!”- காவல் துறை

“நாட்டின் அமைதியைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள்!”- காவல் துறை

770
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் அமைதியைக் கெடுக்கும் எல்லா விதமான கருத்துகள், திட்டமிட்ட அமைதியான கூட்டங்கள் உட்பட அனைத்து வகையான நடவடிக்கைகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று காவல் துறை அனைத்து தரப்பினரையும் எச்சரித்துள்ளது.

பொது ஒழுங்கையும், தேசிய பாதுகாப்பையும் பாதிக்கக்கூடிய கூட்டங்களின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கபப்டும் என்று காவல் துறைத் தலைவர் அப்துல் ஹாமிட் பாடோர்  கூறினார்.

“பல இனம் மற்றும் மத சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதையும் சகிப்புத்தன்மையும் கொண்டிருக்க வேண்டும்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பாதிப்பை உட்படுத்தக்கூடிய எந்தவொரு சம்பவங்களையும் தவிர்க்குமாறு அவர் கூறினார். தேசியக் கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்டிருப்பது, டாக்டர் ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவுகள் மற்றும் அரேபிய வனப்பெழுத்து பிரச்சனை போன்ற முக்கியமான வழக்குகள் குறித்து காவல் துறை விசாரணை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

ஜாகிரின் வழக்கு தொடர்பான விசாரணை கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளது. மேலும், வழிநடத்துதலுக்காக விசாரணை ஆவணங்கள் விரைவில் அரசாங்க தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படும். இந்த விவகாரத்தில் 515 காவல் துறைப் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ஜாகிர் நாடு முழுவதும் தனது தொடர் சொற்பொழிவுகளைத் தொடர வேண்டாம் என்ற காவல் துறையினரின் உத்தரவைக் கடைப்பிடிக்கிறார்,” என்று அவர் கூறினார்.

மலேசியக் கொடியை தலைகீழாக வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் 68 புகார்கள் அறிக்கைகளைப் பெற்றுள்ளதாகவும், 19 விசாரணை ஆவணங்களைத் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.