Home One Line P1 ஜாகிர் நாயக் எதிர்ப்பு பேரணி அன்வாரின் தொலைபேசி அழைப்பால் இரத்து செய்யப்பட்டது!

ஜாகிர் நாயக் எதிர்ப்பு பேரணி அன்வாரின் தொலைபேசி அழைப்பால் இரத்து செய்யப்பட்டது!

739
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கிற்கு எதிரான எதிர்ப்புக் கூட்டம் இன்று நடைபெறாது என்று அதன் ஏற்பாட்டாளர் சங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழ் பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்து பாடத்தை அறிமுகப்படுத்துவதை எதிர்த்து முதலாவது எதிர்ப்புக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு லிட்டில் இந்தியா, பிரிக்பீல்ட்ஸில் நடைபெற்றது.

பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடமிருந்து தமக்கு தொலைபேசி அழைப்பு வந்த பின்னர், இந்தக் கூட்டத்தை இரத்து செய்ய முடிவு செய்ததாக சங்கர் கணேஷ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அன்வார் இப்ராகிம் என்னை அழைத்து எதிர்ப்புக் கூட்டத்தை இரத்து செய்யச் சொன்னார். அவர் இந்திய சமூகத்திற்கு உதவுவதாக உறுதியளித்துள்ளார். இந்த பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசிக்க அடுத்த வாரம் அவரைச் சந்திக்க ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்வதாகக் கூறினார். அவரது கோரிக்கைக்கு நான் ஒப்புக் கொண்டேன். அவருடைய வாக்குறுதியில் நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன்என்று அவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

மேலும், காவல் துறையினரின் அனுமதி பெற ஏற்பாட்டாளர் தவறியதால் இன்று நடைபெற இருந்த கூட்டம் இரத்து செய்யப்பட்டதாக சங்கர் தெரிவித்தார்.

அனுமதி இல்லாமல், எந்தவொரு பிரச்சனையினாலும் மக்கள் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நான் அனுமதியுடன் கூட்டத்தை ஏற்பாடு செய்ய விரும்புகிறேன்,” என்று அவர் விளக்கினார்.

இன்று சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நடைபெற இருந்தஜாகிர் நாயக் தேவையில்லை, இந்தியர்களுக்கும் பிற இனங்களுக்கும் சம உரிமைகள்எதிர்ப்புக் கூட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று பல தரப்பினரிடமிருந்து அழைப்புக் கிடைத்ததாக சங்கர் கூறினார்.

நேற்றிரவு வெள்ளிகிழமை நடந்த எதிர்ப்புக் கூட்டம் தொடர்பாக, காவல் துறையினர் அதன் இரண்டு ஏற்பாட்டாளர்களை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட போதிலும், எந்தவொரு எதிர்பாராத சம்பவமும் இல்லாமல் கூட்டம் சுமூகமாக நடந்தது என்று பிரிக்பீல்ட்ஸ் காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே கூறியதாக டி ஸ்டார் குறிப்பிட்டிருந்தது.