Home One Line P1 பிரிக்பீல்ட்ஸ் அமைதி பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு, இருவர் கைது!

பிரிக்பீல்ட்ஸ் அமைதி பேரணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு, இருவர் கைது!

888
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தமிழ் பள்ளிகளில் நான்காம் ஆண்டு தேசிய மொழிப் பாடப்புத்தகத்தில் அரேபிய வனப்பெழுத்து பாடத்தை முன்மொழியப்படுவதற்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை பிரிக்பீல்ட்ஸில் நடந்த அமைதி பேரணியில் 2000-க்கு மேற்பட்ட மக்கள் கலந்துக் கொண்டதாக மலேசிய நண்பன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த கூட்டம் சுமார் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தக் கூட்டத்தின் போது பொது மக்கள் அரேபிய வனப்பெழுத்து பாடத்தை குழந்தகள் மீது திணிக்காதீர்கள் என்று முழக்கமிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் கூட்டதினை ஏற்பாடு செய்த இரண்டு பேரை விசாரணைக்காக காவல் துறையினர் கைது செய்துள்ளனர் என்று வழக்கறிஞர் தேவநேசன் கணேசன் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவரும் சீன மற்றும் தமிழ் கல்வி குழுக்களின் பிரதிநிதிகள் என்று கணேசன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கைது செய்யப்பட்ட போதிலும், எந்தவொரு எதிர்பாராத சம்பவமும் இல்லாமல் பேரணி சுமூகமாக நடந்தது என்று பிரிக்பீல்ட்ஸ் காவல் துறைத் தலைவர் அரிபாய் தாராவே கூறியதாக டி ஸ்டார் தெரிவித்துள்ளது.