சென்னை: அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘கோமாளி‘. சமிபத்தில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த முன்னோட்டக் காணொளியில் நடிகர் ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று கூறும் காணோளி ஒன்று பயன்படுத்தப்பட்டிருந்தது.
அக்காட்சி வரும் சமயத்தில் ஜெயம் ரவி எழுந்து நின்று, இது 1996-ஆம் வருடத்தில் சொல்லப்பட்டது என்ற வசனத்தை சொல்லுவார். அதனை நகைச்சுவையாக விமர்சிக்கும் விதமாக காட்சி அமைக்கப்பட்டிருந்ததால், அதற்கு கமல் உட்பட ரஜினி இரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும் இப்படத்தின் இயக்கநர் பிரதீப் ரங்கநாதன் இருவரும் மன்னிப்பு கோரி இந்த காட்சியை நீக்குவதாக அறிவித்தார்கள். இவர்களைத் தொடர்ந்து இப்படத்தின் கதாநாயகன் ஜெயம் ரவி, மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.