Home இந்தியா ஐபிஎல்: கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையைத் தோற்கடித்தது!

ஐபிஎல்: கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையைத் தோற்கடித்தது!

531
0
SHARE
Ad

Kolkata-Knight-Riders-Logoகொல்கத்தா, மே 1 – சில நாட்களுக்கு முன்னால் சென்னையில் கொல்கத்தா அணியைத் தோற்கடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பழிவாங்கும் விதமாக நேற்று தங்களின் சொந்த நகரான கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றது.

பெப்சி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

முதல் பாதி ஆட்டத்தில் கொல்கத்தா அணி பந்து வீசியது. 20 ஓவர்களில் மொத்தம் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை எடுத்து சென்னை அணி முதல் பாதி ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

#TamilSchoolmychoice

இரண்டாவது ஆட்டத்தில் உத்தப்பா மற்றும் ரஸ்ஸல் இருவரின் அபார ஆட்டத்தினால், கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 169 ஓட்டங்களை எடுத்தது.

இதன் காரணமாக, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

Chennai Super Kings Logo with Dhoni

இன்று தொழிலாளர் தின பொது விடுமுறையை முன்னிட்டு இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

முதல் ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியும் கிங்ஸ் ஆஃப் பஞ்சாப் அணியும் புதுடில்லியில் மோதுகின்றன.

இரண்டாவது ஆட்டத்தில் மும்பாய் இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பாய் நகரில் விளையாடுகின்றன.