Home இந்தியா ஐபிஎல் கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

997
0
SHARE
Ad

மும்பை – (மலேசிய நேரம் அதிகாலை 1.10)

இரண்டு வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தடை செய்யப்பட்டிருந்த மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டுக்கான போட்டியில் அனுமதிக்கப்பட்டு, இந்திய நேரப்படி நேற்று (ஞாயிறு 27 மே) நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வெற்றி கொண்டு சாதனை படைத்திருக்கிறது.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்னால் டோஸ் எனப்படும் தேர்வில் பந்து வீச்சை சென்னை சூப்பர் கிங்ஸ் தேர்வு செய்தது.

#TamilSchoolmychoice

சன்ரைசர்ஸ் அணி 20 ஓவரில் 178 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

இடைவேளைக்குப் பின்னர் களமிறங்கிய சென்னை அணி 179 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு விளையாடத் தொடங்கியது. 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18.3 ஓவர்களிலேயே 181 ஓட்டங்களை எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய நாட்டின் வாட்சன் சென்னைக்காக சிறப்பாக விளையாடி, தனி ஒருவராக 117 ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்ததோடு, சென்னை அணியின் வெற்றிக்கான நாயகனாகவும் திகழ்ந்தார்.