கோலாலம்பூர் – இன்று தலைநகரில் நடைபெற்ற கோலாலம்பூர் சிலாங்கூர் இந்தியர் தொழிலியல் மற்றும் வர்த்தக சங்கத்தின் 89-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் டத்தோ ஆர்.இராமநாதன் தலைமையிலான புதிய குழுவினர் பல்வேறு பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நடப்பு தலைவர் டத்தோ டாக்டர் வி.சண்முகநாதனை 64 வாக்குகள் வித்தியாசத்தில் டத்தோ இராமநாதன் தோற்கடித்தார். இராமநாதனுக்கு 132 வாக்குகள் கிடைத்த வேளையில், நடப்புத் தலைவர் சண்முகநாதனுக்கு 68 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
துணைத் தலைவராக இராஜா டத்தோ வி.கே.கே.தியாகராஜன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சங்கத்தின் உதவித் தலைவராக டி.செல்வம் 121 வாக்குகள் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே பதவிக்குப் போட்டியிட்ட டத்தோஸ்ரீ டாக்டர் முனியாண்டி 79 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
பொருளாளராக குமரகுரு முனியாண்டி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கீழ்க்காணும் 14 பேர் சங்கத்தின் நிர்வாகக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:
- சித்ரா தேவி பாலகிருஷ்ணன் 137 வாக்குகள்
- நிவாஸ் ராகவன் – 132 வாக்குகள்
3. புவனா ஜெயகுமார் – 129 வாக்குகள்
4. சரவணன் டத்தோ பாஸ்கரன் 128 வாக்குகள்
5.ஞானசம்பந்தன் சுப்பிரமணியன் 127 வாக்குகள்
6. பிரபாகரன் வைத்தியலிங்கம் 125 வாக்குகள்
7. பவுசியா பிபி அப்துல் அசிஸ் – 122 வாக்குகள்
8. டோனி கிளிப்பர்ட் – 113 வாக்குகள்
9. சந்திரசேகரன் – 109 வாக்குகள்
10. செல்வராஜ் ஆசீர்வாதம் – 108 வாக்குகள்
11. என்.பி.இராமன் – 108 வாக்குகள்
12. நவர்மணி இராமச்சந்திரன் – 104 வாக்குகள்
13. சாதனா சேகரன் – 100 வாக்குகள்
14. பவுசியா பேகம் – 98 வாக்குகள்