Home இந்தியா காலணி வீச்சு : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்

காலணி வீச்சு : ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்

1088
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் இரவு 11.20 நிலவரம்) இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சென்னைத் தெருக்களில் ஆர்ப்பாட்டங்கள் பரவலாக நடைபெற்ற வேளையில் திட்டமிட்டபடி சென்னை-கொல்கத்தா இடையிலான போட்டி எந்தவிதப் பிரச்சனையும் இன்றி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

எனினும் ஆட்டத்தின் நடுவில் நாம் தமிழர் கட்சிக்காரர்கள் சிலர் தங்களின் காலணிகளை மைதானத்தில் வீசியதோடு நாம் தமிழர் கட்சிக் கொடிகளையும் வீசியதைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களைக் கைது  செய்துள்ளனர்.

நாம் தமிழர் கட்சிக் கொடியைக் காட்டி அவர்கள் முழக்கம் செய்தனர். இதுவரையில் காவல் துறையினர் 8 பேரைக் கைது செய்து அரங்கிலிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

#TamilSchoolmychoice

இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எனினும் இன்னும் சற்று நேரத்தில் ஓர் இடைவெளிக்குப் பின்னர் கிரிக்கெட் ஆட்டம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.