Home கலை உலகம் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் – பாரதிராஜா கைது

ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிரான போராட்டம் – பாரதிராஜா கைது

1391
0
SHARE
Ad

சென்னை – (மலேசிய நேரம் இரவு 11.00 மணி நிலவரம்) இன்று செவ்வாய்க்கிழமை ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையில் சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என திரையுலகினர் இயக்குநர் பாரதிராஜா தலைமையில் கூடி சென்னைத் தெருக்களில் பேரணியை நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் கவிஞர் வைரமுத்து, நாம் தமிழர் கட்சி சீமான், இயக்குநர் வெற்றி மாறன், இயக்குநர் அமீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் காவல் துறையினர் விதித்திருந்த தடையை மீறி போராட்டம் நடத்தியதற்காக பாரதிராஜா, அமீர், வெற்றி மாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.