Home வாழ் நலம் மஞ்சள் காமாலை நோயை குணமாக்கும் சுரைக்காய்!

மஞ்சள் காமாலை நோயை குணமாக்கும் சுரைக்காய்!

999
0
SHARE
Ad

jpg,ஏப்ரல் 30 – சுரைக்காய் என்பது கொடி இனத்தைச் சார்ந்த ஒரு தாவரம்.  சுரைக்காய் உருண்டை வடிவுடையதாயும் பருமனாகவும், பளபளப்பாகவும், மேல் தோல் மிகவும் மிருதுவானதாகவும் இருக்கும். சுரைக்காய் மிகுந்த நீர்ச்சத்து உடையது.

சுரைக் கொடியின் கீரையைக் கூட சமைத்து (கடைந்து) உபயோகப்படுத்துவது உண்டு. இது குளிர்ச்சியை உண்டாக்கக் கூடியது. உடல் உஷ்ணத்தை தணிப்பதற்கென இதை உபயோகப்படுத்தலாம். இது சிறு நீரைப் பெருக்கக் கூடிய சிறந்த உணவுப் பொருள்.

இதை உணவாகக் உட்க்கொள்ளும்போது உடலில் நீரேற்றத்தால் வந்த வீக்கத்தை கரைக்க வல்லது. தேங்கிய சிறுநீற்றை வெளியேற்ற உதவுவது. பூசணிக்காயை அல்வா என்னும் இனிப்பு பண்டம் செய்வது போல சுரைக்காயையும் இனிப்பான அல்வா செய்யப் பயன்படுத்தலாம்.

#TamilSchoolmychoice

வீக்கம், கட்டிகளைக் கரைக்கவும், கொப்புளங்களை ஆற்றவும் இதை நசுக்கி மேற்பற்றாக பயன்படுத்துவர். சுரைக் கொடியின் இலைத் தீநீர் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகத் தருவதுண்டு.

சுரை இலையினால் நீர்க்கோவை, உடம்பு வீக்கம், வாத, பித்த போகும். சுரை இலை மலத்தை இளக்கவல்லது என்பதால் மலச் சிக்கல் உடையவர்கள் இதைக் கீரையாகக் கடைந்து சாப்பிடலாம். இது ஜீரணத்தையும் துரிதப்படுத்த வல்லது. சுரைக்கு பைத்தியத்தை தணிவிக்கும் தன்மையும் உண்டு.

1-DSCN2464சுரைக்காயின் மருத்துவ குணங்கள்:

சுரைக்காய் தன்னுள் 96 சதவீதம் நீர்ச்சத்தைப் பெற்றிருக்கிறது. இதனால் இதனுடைய சாறு எடுப்பது மிகவும் எளிதாகின்றது. சுரைக்காய்ச் சாறு விட்டமின் ‘சி’, விட்டமின் ‘பி’, விட்டமின் ‘சி’, “சோடியம்“, “இரும்பு”, “பொட்டாசியம்” ஆகிய சத்துக்களைப் பெற்றுள்ளதால் புத்துணர்வு தரக் கூடிய, சோர்வைப் போக்கக் கூடிய உணவாகப் பயன்படுகின்றது.

ஒரு கப் சுரைக்காய்ச் சாற்றில் 1.8 மி.கி. துத்தநாகச்சத்து இருப்பதால் அது செல்களின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும், உட்சுரப்பிகள் ஒழுக்காகச் சுரப்பதற்கும் உறுதுணையாகின்றது.

உடல் பருமன் ஆனவர்கள் சுரைக்காய் சாறு ஒரு கப் அளவு எடுத்து அன்றாடம் காலையில் குடிப்பதால் உடல் எடை குறைந்து அழகான மெலிந்த தேகத்தைப் பெறுவர்.

பொட்டாசியம், இரும்புச்சத்து, விட்டமின்கள் ஆகியன செறிந்த சுரைக்காய்ச் சாறு ஒரு ஊட்டசத்து மிகுந்த உணவு மட்டுமின்றி பசியை அடக்கித் தேவையின்றி உணவு உண்பதைத் தவிர்த்து உடலை மெலியச் செய்கிறது.

சுரைக்காய்ச் சாறு தர்ப்பூசணி சாறு போல வெயிலினால் வரும் உஷ்ணத்தைத் தவிர்க்க உதவுகிறது. சுரைக்காயில் 95 விழுக்காடு நீர்ச்சத்து உள்ளதால் இது தாகத்தைத் தணிப்பதோடு உடலிலிருந்து வெளிப்பட்டு வியர்வையாய் சென்ற நீர்ச்சத்துக் குறையை ஈடுகட்டுவதாகவும் உள்ளது.