Home கலை உலகம் இயக்குநரை காதலித்து மணக்கிறார் நடிகை விஜயலட்சுமி!

இயக்குநரை காதலித்து மணக்கிறார் நடிகை விஜயலட்சுமி!

696
0
SHARE
Ad

vijaya lakshmi actressசென்னை, ஏப்ரல் 30 – இயக்குனர் பெரோஸை, நடிகை விஜயலட்சுமி காதல் திருமணம் செய்து கொள்கிறார். இவர்களது திருமணம் சென்னையில் ஜூன் 28-ல் நடக்கிறது. ‘சென்னை–28’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி.

இயக்குனர் அகத்தியனின் மகளான இவர், அஞ்சாதே, கற்றது களவு, வனயுத்தம், ஆடாம ஜெயிச்சோமடா, வெண்ணிலா வீடு’ ஆகிய படங்களிலும் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். ‘வெண்ணிலா வீடு’ படத்துக்குப்பின், அவர் சினிமாவில் நடிக்கவில்லை.

புதிய பட வாய்ப்புகளை அவர் தவிர்த்து வந்தார். இந்த நிலையில், விஜயலட்சுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன் பெயர், பெரோஸ். இவர் இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராக இருந்தார். ஒரு புதிய படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

#TamilSchoolmychoice

இவர்களது திருமணம் சென்னையில் ஜூன் 28-ஆம் தேதி நடக்கிறது. இது, பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் ஆகும். காதல் திருமணம் செய்து கொள்வது பற்றி நடிகை விஜயலட்சுமி கூறுகையில்,

“பெரோசும், நானும் பள்ளிக்கூட பருவத்தில் இருந்து நண்பர்கள். பல வருடங்களாக நட்புடன் பழகி வந்தோம். அது, காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்து வந்தோம். எங்களின் காதலை இரண்டு பேரின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டார்கள்”.

“பெரோஸ், இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்றாலும், நான் மதம் மாறவில்லை. அந்த விஷயத்தில் நாங்கள் இருவரும் தெளிவாக இருக்கிறோம். நான் நானாகவே இருப்பேன். அவர் அவராகவே இருப்பார். திருமணத்துக்குப்பின் நான் நடிக்க மாட்டேன்” என்றார்.