Home கலை உலகம் உடலைக் குறைக்கும் சிகிச்சையால் தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

உடலைக் குறைக்கும் சிகிச்சையால் தெலுங்கு நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்!

984
0
SHARE
Ad

Aarthi Agarwalநியூ ஜெர்ஸி, ஜூன் 8 – ‘பம்பரக் கண்ணாலே’ படத்தில் ஸ்ரீகாந்துடன் நடித்த நடிகை ஆர்த்தி அகர்வால், நியூ ஜெர்ஸியில் மரணம் அடைந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆர்த்தி அகர்வால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்து தெலுங்குத் திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.  உடலைக் குறைக்கப் பயன்படுத்தும் ‘லிப்போசக்‌ஷன்’ என்ற முறையால் தான் அவருக்குப் பிரச்சனை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

அவர் நடித்து வெளியான ‘ரனம் 2’ படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில், அவர் சனிக்கிழமை மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தி தெலுங்கு ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சியாக உள்ளது.

30 வயதே ஆன ஆர்த்தி அகர்வால் மரணத்துக்கு, இணையதளம் மூலம் ஏராளமான இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன. இதே ‘லிப்போசக்‌ஷன்’ எனும் உடலைக் குறைக்கும் முறையைப் பல நடிகைகள் மட்டுமின்றி , மேல்தட்டு பெண்கள், ஆண்கள் என   உடலைக் குறைக்க பயன்படுத்துவது தற்போது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.