Home கலை உலகம் கேரள சட்டசபை விழாவில் குடிபோதையில் தள்ளாடியபடி வந்த நடிகை ஊர்வசி (காணொளியுடன்)!

கேரள சட்டசபை விழாவில் குடிபோதையில் தள்ளாடியபடி வந்த நடிகை ஊர்வசி (காணொளியுடன்)!

735
0
SHARE
Ad

actress-urvashi-10-600திருவனந்தபுரம், ஏப்ரல் 28 – கேரள சட்டசபை வளாகத்தில் நடந்த பெண்கள் ஊழியர் சங்க விழாவில் பிரபல நடிகை ஊர்வசி குடிபோதையில் தள்ளாடியபடி வந்தது பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கேரள சட்டசபையில் பணிபுரியும் இடது தொழிற்சங்கத்தை சேர்ந்த பெண்கள் ஊழியர் சங்க ஆண்டு விழா கடந்த 2 தினங்களுக்கு முன்  சட்டசபை வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடந்தது. சபாநாயகர், சக்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இது தவிர ஏராளமான சட்டசபை  ஊழியர்களும் கலந்து கொண்டனர் பிற்பகல் 2.30 மணியளவில் பிரபல நடிகை ஊர்வசி விழாவை தொடங்கி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 3  மணியாகியும் அவர் வரவில்லை. இதையடுத்து விழாவை சபாநாயகர் சக்தன் தொடங்கி வைத்து பேசினார்.

#TamilSchoolmychoice

பெரும்பாலானோர் பேசி முடித்த பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து ஊர்வசி வந்தார். குடிபோதையில் வந்த ஊர்வசி தள்ளாடியபடியே மேடையில்  அமர்ந்தார். பின்னர் அவர் பேச தொடங்கினார். குடிபோதையில் இருந்ததால் நாக்கு உளறி பேசினார்.

இதை கேட்ட சபாநாயகர் சக்தன் உட்பட  அனைவரும்  அதிர்ச்சி அடைந்தனர். சம்பந்தம் இல்லாமல் ஊர்வசி பேச தொடங்கியதால் விழா அமைப்பாளர்கள் அவரை மேடையில் இருந்து  அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் தொடர்ந்து விடாப்பிடியாக அவர் பேசிக் கொண்டிருந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சபாநாயகர் சக்தன் பிரச்சனை பெரிதாகும் என்று கருதி அங்கிருந்து நழுவினார். பின்னர் விழா அமைப்பாளர்கள் ஊர்வசியை வெளியே அழைத்து வந்து காரில் ஏற்றி அனுப்ப முயன்றனர். அவர் காரில் ஏறாமல் நான் விழாவில் இருக்கும்போது எப்படி சபாநாயகர் அங்கிருந்து  செல்லலாம் என்று கேட்டு வாக்குவாதம் செய்தார்.

நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னரே விழா அமைப்பாளர்களால் அவரை அனுப்ப முடிந்தது.  இதனால் சட்டசபை வளாகத்தல் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் ஊர்வசி உளறி பேசும் காணொளி ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில்  பரவி வருகிறது.

https://youtu.be/wa1FKlCFgcE