Home Featured கலையுலகம் “அனைத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார்” – அக்கா கல்பனா குறித்து ஊர்வசி கண்ணீர் பேட்டி!

“அனைத்தையும் எனக்காக விட்டுக் கொடுத்தார்” – அக்கா கல்பனா குறித்து ஊர்வசி கண்ணீர் பேட்டி!

1033
0
SHARE
Ad

kalpana-urvashiதிருவனந்தபுரம் – நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரியும் நடிகையுமான கல்பனா கடந்த 25-ம் தேதி ஐதராபாத்தில் உள்ள விடுதி ஒன்றில் திடீரென மரணம் அடைந்தார். மாரடைப்புக் காரணமாக அவர் மரணித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தனது அக்காவின் திடீர் மரணத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள ஊர்வசி, திருவனந்தபுரத்தில் ஊடகம் ஒன்றிற்கு கல்பனா குறித்த தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவரின் அந்தப் பேட்டியில், “என் அக்காவிற்கு வந்த பல பட வாய்ப்புகளில் நான் தான் நடித்தேன். அவருக்கு வந்த வாய்ப்பை நான் பயன்படுத்தியதை நினைத்து அவர் என் மீது கோபப்பட்டதே இல்லை. மாறாக என் வளர்ச்சியை பார்த்து மகிழ்ந்தார்.”

“எனக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் முந்தானை முடிச்சு படத்தில் கூட கதாநாயகியாக முதலில் என் அக்கா தான் ஒப்பந்தம் ஆனார். படப்பிடிப்புக்கு அவருடன் நான் சென்றபோது, பாக்யராஜ் என்னை பார்த்துவிட்டு அந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். என் அக்கா என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.