Home Featured வணிகம் அமேசானுக்கு சவால் விட வருகிறது மலேசியாவின் அலாதீன் குழுமம்!

அமேசானுக்கு சவால் விட வருகிறது மலேசியாவின் அலாதீன் குழுமம்!

1036
0
SHARE
Ad

Aladdinstreet_கோலாலம்பூர் – மலேசியாவின் முதல் இணைய வர்த்தக நிறுவனம் அலாதீன்ஸ்ட்ரீட்.காம்.மை இன்று முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மலேசியாவின் புகழ்பெற்ற அலாதீன் குழுமம், சுமார் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அந்நிறுவனத்தை இம்மாத இறுதியில் துவக்க இருப்பதாக அலாதீன் குழுமத்தின் இணை நிறுவனரும், மலேசியாவின் முதல் விண்வெளி வீரரருமான டத்தோ டாக்டர் ஷேக் முஸாபர் ஷுகொர் இன்று அறிவித்தார்.

கோலாலம்பூரை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா, இந்தோனேசியா, சீனா என சுமார் 30 நாடுகளில் இந்த நிறுவனம் இயங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் குறிப்பிட வேண்டிய, மிக முக்கியமான ஒன்று என்னவென்றால், இந்நிறுவனம் முற்றிலும் ஹலால் முறையில் ஷரியா இணக்கம் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது குறித்து ஷேக் முஸாபர் ஷுகொர் கூறுகையில், “மருந்து, ஃபேஷன், ஒப்பனை மற்றும் அழகுப் பொருட்கள், உணவு மற்றும் குளிர்பானங்கள், அத்துடன் வங்கி மற்றும் நிதி சேவைகள் என ஒட்டுமொத்த வர்த்தகத்தையும் ஏற்படுத்த இருக்கிறோம்.”

#TamilSchoolmychoice

“எங்களது ஒரே இலக்கு அமேசான் மற்றும் அலிபாபா நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளிப்பதாகும். ஒரு நாள், எங்கள் நிறுவனம் அந்நிறுவனங்களையும் விஞ்சி நிற்கும்” என்று கூறியுள்ளார்.