Home Featured தமிழ் நாடு மாணவிகள் தற்கொலை விவகாரம்: கல்லூரிக்கு முறையற்ற அனுமதி வழங்கியது அன்புமணியா?

மாணவிகள் தற்கொலை விவகாரம்: கல்லூரிக்கு முறையற்ற அனுமதி வழங்கியது அன்புமணியா?

733
0
SHARE
Ad

3 student death- anbumaniவிழுப்புரம் – விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் அமைந்துள்ள எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரியில், 2-ம் ஆண்டு படித்து வந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள் கூட்டாக தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தற்போது பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்தக் கல்லூரிக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பாமாகவின் அன்புமணி பதவி வகித்த காலத்தில் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது இணை அமைச்சராக ஆந்திராவை சேர்ந்த பனபகாலட்சுமியும், மாநில சுகாதாரத்துறை அமைச்சராக எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் இருந்துள்ளனர். முறையாக ஆய்வு செய்யாமல் கல்லூரிக்கு அனுமதி வழங்கியதால் தான், 3 மாணவிகளின் உயிர் காவு வாங்கப்பட்டிருப்பதாகப் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

பரபரப்பான இந்தக் குற்றச்சாட்டினை மறுத்துள்ள அன்புமணி, “மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக நான் இருந்த போது, இணை அமைச்சராக ஆந்திராவை சேர்ந்த பனபகாலட்சுமி இருந்தார். அவருக்கு கீழ்தான், ஆயூஸ் எனப்படும் ஹோமியோபதி மருத்துவமனைக்கான அனுமதி வழங்கும் பிரிவு இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.