Home இந்தியா தருமபுரி : பாஜக – பாமக கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணி தோல்வி

தருமபுரி : பாஜக – பாமக கூட்டணி வேட்பாளர் சௌமியா அன்புமணி தோல்வி

319
0
SHARE
Ad
சௌமியா அன்புமணி

சென்னை : இன்று காலை முதல் வெளியான வாக்கு எண்ணிக்கையில் சௌமியா அன்புமணி முன்னணி வகிக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகின.

பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாமக சார்பில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டார் சௌமியா அன்புமணி.

எனினும் இறுதிக் கட்ட எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவினார். திமுக அந்தத் தொகுதியிலும் வெற்றி பெற்றது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் 39 தொகுதிகளையும் புதுச்சேரி தொகுதியையும் திமுக கூட்டணியே கைப்பற்றி சாதனை புரிந்துள்ளது.

இதுவரையில் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் ஒரு தடவை கூட, ஒரு கட்சி தலைமையிலான கூட்டணி தமிழ் நாட்டின் அனைத்து 40 தொகுதிகளையும் வென்றதாக வரலாறு இல்லை.

பாமக தலைவர் இராமதாசின் புதல்வர் அன்புமணியின் மனைவியான சௌமியா தருமபுரியில் களமிறங்கிய நிலையில் அவரின் 2 புதல்விகள் அவருக்காகத் தீவிரப் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். அவர்களின் பங்களிப்பு ஊடகங்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தன.