Home Featured தமிழ் நாடு மாணவிகள் தற்கொலை விவகாரம்: மோனிஷா உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!  

மாணவிகள் தற்கொலை விவகாரம்: மோனிஷா உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!  

669
0
SHARE
Ad

Girls suicideசென்னை – விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சியில் அமைந்துள்ள எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்த சரண்யா, மோனிஷா, பிரியங்கா என்ற மூன்று மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மாணவி மோனிஷாவின் தந்தை தமிழரசன், மோனிஷாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

குறிப்பிட்ட அந்த மனு மீது இன்று நடத்தப்பட்ட விசாரணையில், மோனிஷாவின் உடலை மறுபிரேத பரிசோதனைக்கு உட்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.