Home இந்தியா கவிஞர் வைரமுத்துவின் மீது தவறில்லை: சென்னை உயர்நீதிமன்றம்!

கவிஞர் வைரமுத்துவின் மீது தவறில்லை: சென்னை உயர்நீதிமன்றம்!

1195
0
SHARE
Ad

highcourt_1970547fசென்னை – ஆண்டாள் பற்றி சர்ச்சைக் கருத்து கூறியதாக கவிஞர் வைரமுத்துவின் மீது கொளத்தூர், சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தனது எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்குகளை இரத்து செய்யக் கோரி வைரமுத்து தரப்பில் இருந்து மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதனை இன்று வெள்ளிக்கிழமை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், வைரமுத்து தனது சொந்தக் கருத்தைக் கூறவில்லை. அவர் மேற்கோள் மட்டுமே காட்டியிருக்கிறார் என்பதால் அவர் மீது தவறில்லை என்று கூறி வழக்கை பிற்பகலுக்கு ஒத்தி வைத்திருக்கிறது.