Home நாடு மகாதீரின் உதவியால் சிரம்பான் தொகுதியை வெல்வோம் – மசீச நம்பிக்கை

மகாதீரின் உதவியால் சிரம்பான் தொகுதியை வெல்வோம் – மசீச நம்பிக்கை

1431
0
SHARE
Ad

Chong Sin Woonகோலாலம்பூர் – தேசிய முன்னணியின் சார்பில் நீண்ட காலம் பிரதமராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் உதவியால் 14-வது பொதுத்தேர்தலில் சிரம்பான் தொகுதியை மசீச வென்றுவிடும் என மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் சோங் சின் வூன் தெரிவித்திருக்கிறார்.

காரணம், தற்போது எதிர்கட்சியை மகாதீர் தான் தலைமையேற்றிருக்கிறார் என்றும் சோங் சின் வூன் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், கடந்த தேர்தலில் சிரம்பான் தொகுதியில், சீன வாக்காளர்கள் ஜசெக-வை ஆதரித்ததற்குக் காரணம், அரசாங்கம் மாற்றுவதாக அது கொடுத்த வாக்குறுதி தான் என்றும் சோங் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

 

Comments