Home நாடு தேசிய மிருகக்காட்சி சாலை: இரண்டாவது குட்டியை ஈன்றது பாண்டா!

தேசிய மிருகக்காட்சி சாலை: இரண்டாவது குட்டியை ஈன்றது பாண்டா!

1244
0
SHARE
Ad

Pandamalaysiaகோலாலம்பூர் – சீனாவில் இருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு மிகக் குறைவான காலத்தில் முதல் குட்டியை ஈன்று உலக சாதனை படைத்த சியாங் சியாங் – லியாங் லியாங் ஜோடி பாண்டாக்கள் மீண்டும் ஒரு குட்டியை ஈன்றிருக்கின்றன.

எனினும், புதிதாகப் பிறந்த குட்டி ஆணா, பெண்ணா என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும், தாய் பாண்டா அதனை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்றும் இயற்கைவளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ வான் ஜூனைடி துவாங்கு ஜாஃபர் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மலேசியாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான 40 ஆண்டுகால நல்லுறவைக் கொண்டாடும் விதமாக கடந்த 2014-ம் ஆண்டு, மே 21-ம் தேதி, சீனா சியாங் சியாங், லியாங் லியாங் என்ற ஒரு ஜோடி பாண்டாக்களை மலேசியாவிற்கு அனுப்பி வைத்தது.

#TamilSchoolmychoice

அதனைப் பாதுகாப்பாக தேசிய மிருகக்காட்சி சாலையில் வைத்துப் பராமரித்து வரும் மலேசிய அரசு, அதற்காக பிரத்யேக இடத்தை அமைத்து அங்கு தட்ப வெட்ப நிலையை மாற்றி நல்ல முறையில் வளர்த்து வருகின்றது.

இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் தேதி, இந்த பாண்டா ஜோடி முதல் குட்டியை ஈன்றன. இருநாடுகளுக்கிடையான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அக்குட்டி கடந்த 2016-ம் ஆண்டு சீனாவிடம் திருப்பிக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், அதே பாண்டா ஜோடி குறைந்த காலத்தில் மீண்டும் ஒரு குட்டியை ஈன்றிருக்கின்றன.

12 ஜோடி பாண்டாக்களை, சீன அரசு பல்வேறு நாடுகளுக்கு வழங்கியிருக்கிறது. அவற்றில், மலேசியாவிற்கு வழங்கப்பட்ட பாண்டாக்கள் மட்டும் தான் குறைவான காலத்தில் இரு குட்டிகளை ஈன்றிருக்கின்றன என்று வான் ஜூனைடி தெரிவித்தார்.