கோலாலம்பூர் – வரும் 2022- 2023-க்குள், மலேசியா முழுவதும் 5ஜி அலைக்கற்றை சேவை வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் தயாராக இருக்கும்படி கூறப்பட்டிருக்கிறது.
இது குறித்து எரிக்சன் (மலேசியா) செண்ட்ரியான் பெர்ஹாட் தலைவர் தாட் ஆஷ்டான் கூறுகையில், இப்போது அடிப்படைப் பணிகள் தொடங்க ஆரம்பித்தால், இன்னும் 5 ஆண்டுகளுக்குள் மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று தெரிவித்திருக்கிறார்.
“உலகளவில் 2019-ல் 5ஜி அலைக்கற்றை ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே அந்த ஒப்புதல் படி அனைத்து நிறுவனங்களும் அதற்கேற்ப பொருட்களைத் தயாரிக்க வேண்டும்” என்று ஆஷ்டான் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.